தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், ஒவ்வொரு அலங்காரமும் நடைபெறும்.
அதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 9ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் மஞ்சள், சந்தனம், குங்குமம் என ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.
SRI MAHA VARAHI - FRUIT DECORATION |
இதனையடுத்து ஒன்பதாம் நாளான நேற்று கனி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (18.7.21) காய்கனி அலங்காரமும் நடைபெறவுள்ளது. நிறைவு நாளான வருகிற 19 -ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு கோயிலுக்குள் புறப்பாடும் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment