Sunday, August 22, 2021

அருள்மிகு லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில்

 தினம் ஒரு திருத்தலம் : கிழக்கு நோக்கிய பெருமாள்... அற்புதமாக காட்சி தரும் தலம்.!!

கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் ஆகும். அங்கேதான் திருமணத்திற்கு வந்த தேவர்களையெல்லாம் விஷ்ணு வரவேற்றாராம். அதனால் அது எதிர்கொள்பாடி என்று பெயர் பெற்றது.



கோயில் சிறப்பு :


பொதுவாக கோயில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு.


இதற்கு காரணம் தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு திருமணத்தை நடத்தி வைக்க, மேற்கு நோக்கி அமர்ந்தார் என காரணம் சொல்கின்றனர்.


சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.


கையில் அமிர்தகலசம் தாங்கிய கோலத்தில் வடக்கு நோக்கி தன்வந்திரி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.


தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீலட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.


இக்கோயிலில் தும்பிக்கையாழ்வார், வீர ஆஞ்சநேயர், கிருஷ்ணர், கருடாழ்வார், ஐந்து தலைநாகர், ராமானுஜர் சந்நிதிகள் உண்டு.


கோயில் திருவிழா :


வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கருட ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை கொண்டாடப்படுகிறது.


வேண்டுதல் :


சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால் சத்ரு பயம் நீங்கும். ராகுதோஷம் உள்ளவர்கள் ஐந் துதலை நாகருக்கு வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன் :


ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வடைமாலை சாற்றியும், நாகருக்கு ராகுகாலத்தில் தீபமேற்றியும், தன்வந்திரிக்கு நெய் தீபமேற்றியும் வழிபாடு செய்கின்றனர்.

No comments:

Post a Comment