Sunday, August 22, 2021

MAHA PERIYAVAA STORIES

 பெரியவாதான், தன்னை வழிமறித்துத் தற்கொலையைத் தடுத்தவர் என்பதைக் கண்ணெதிரே கண்ட உருவத்தால் உணர்ந்தார்.

ஆந்திராவில் பெரியவா இருந்த சமயம் அது. 


ராகவ சாஸ்திரி என்ற ஆசார சீலர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய பண்டிதரும் கூட. பூஜைகளை சிரத்தையாகச் செய்வார்.


மக்கள் பலர் வந்து வணங்கிச் செல்வதுண்டு.


ஒரு நாள் பூஜையைத் தொடங்கப் போகிற சமயம், ஒருவன் வந்து அவர் காலைத் தொட்டு கும்பிட்டு விட்டான். 


அதனால், ஆசாரம் போய்விட்டதென்று, பெருங்கோபம் கொண்டு அவர் கத்தினார். 


எத்தனை மன்றாடியும், மன்னிக்க மறுத்து விட்டார். அழுது கொண்டே அவன் போனான்.


சிறிது நேரம் கழித்து, சாஸ்திரிக்கு, தான் நடந்து கொண்ட முறையை நினைத்து குற்ற உணர்வு வந்தது. 


கோபத்தை அடக்க முடியவில்லையே! என்ன பூஜை பண்ணி, என்ன ஆசார அனுஷ்டானம் பண்ணினாலும், என்ன பயன்?' என்று கழிவிரக்கப்பட்டார். 

தன் மேல் வந்த வெறுப்பில், தற்கொலையே செய்து கொள்ளும் அளவுக்குப் போய், கோதாவரியில் விழுவதற்குக் கிளம்பி விட்டார்.


அப்போது, அவர் எதிரே சாமியார் ஒருவர் காட்சி கொடுத்தார். "நில்" என்று தடுத்தார். 


சாஸ்திரி தன்னையும் அறியாமல் மனம் உருகிப் போனார். மறுபடியும் வீட்டுக்கே போய்விட்டார். 


அன்று இரவு கனவில், மறுபடியும் அதே சாமியார் காட்சி கொடுத்தார். 


அதற்குப் பிறகு அவருக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. 


மறுபடியும், தற்கொலை எண்ணம் வருவதும், போவதுமாக இருந்தது. பொழுது விடிந்தது.


இரு நண்பர்கள் காரில் வந்து இறங்கினார்கள்.


"பக்கத்து ஊரில் காஞ்சி காமகோடி சங்கராச்சார்யார் வந்திருக்காராம். வர்ரீங்களா ! தரிசனம் பண்ணி விட்டு வரலாம்" என்று சாஸ்திரியை அழைத்தார்கள்.


அதற்கிணங்க கிளம்பிச் சென்றவர், பெரியவாதான், தன்னை வழிமறித்துத் தற்கொலையைத் தடுத்தவர் என்பதைக் கண்ணெதிரே கண்ட உருவத்தால் உணர்ந்தார். 


கண்ணீர் வழிந்தது.


அவரைக் கண்டதும் பெரியவா, 


"ஒரு சால்வையை எடுத்து அவருக்குப் போர்த்துங்கள்!" என்று அங்குள்ள ஒருவரிடம் சொன்னார்.


சாஸ்திரியோ," இதற்கெல்லாம் எனக்கு அருகதையே இல்லை; நான் ராக த்வேஷத்தை விடாதவன்!" என்று வாங்கிக் கொள்ள மறுத்து விடுகிறார்.


பெரியவா பெருங்கருணையுடன், 


"உன்னிடம் ஒரு தோஷமும் இல்லை. இந்த சால்வையை ஏத்துக்கோ.. "என்று சொல்லவே, அவரால் மறுக்க முடியவில்லை.


அன்றிலிருந்து அவருக்கு கோபம் என்பதே வரவில்லையாம்.


முன்பின் தெரியாதவர்களுக்குக் கூட சுவாமிகள், அனுக்ரகம் உண்டு என்பதை இங்கே பார்க்கிறோம்.


பின் குறிப்பு - 


ராகத்வேஷம்


சில விஷயங்களில் ரொம்பப் பற்றுடன் இருப்பதும், சிலவற்றை புறந்தள்ளுவதும் மிகச் சாதாரணம். இந்த மாதிரியான பிடித்தது, பிடிக்காதது அப்படின்னு இருப்பதையே ராகத்வேஷம் அப்படின்னு சொல்லியிருக்கு.


பொதுவாக ராக த்வேஷம் கொண்டவர்களுக்கு பிறரைத் தொந்தரவு செய்யும் மனப்பான்மை இருக்கும்.


ஆனால் ஒரு பூரண பக்தனுக்கு / சரணாகதி செய்பவனுக்கு இந்த குணம் இருக்காது.


ஏனென்றால் அவனுக்கு இறைவனை விட உயர்ந்த பொருள் என்று எதுவுமே கிடையாது

No comments:

Post a Comment