நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உங்கள் வாழ்க்கையை, நிஜத்திலும் வாழவேண்டும் என்று நினைக்கிறீர்களா? சக்தி சக்கர பயிற்சி செய்யுங்கள்.
CHAKRA |
முதலில் விடா முயற்சி எடுக்க வேண்டும். தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. நம்முடைய கற்பனையான வாழ்கையை தினம் தினம் நம் மனதில் நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் எது ஒன்றை விதைக்கிறோமோ, அதுதான் வளர்ந்து விருட்சமாகி நிற்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சரி. நம்முடைய கற்பனையான வாழ்க்கையை நிஜமாக மாற்ற வேண்டும் என்றாலும், நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களில் ஏதாவது தீரவேண்டும் என்றாலும், அல்லது உங்கள் மனதில் எப்படிப்பட்ட ஒரு கோரிக்கை இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து ஒரு பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அதை விரைவாகவே நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று சொல்கிறது இந்த சக்தி சக்கர பயிற்சி.
இந்த பயிற்சியை முறையாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்களுக்கு சௌகரியமான இடத்தில் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு உங்களது இரண்டு கண்களையும் 5 நிமிடம் மூடிக்கொண்டு, உங்களது கண்களையே கவனிக்க வேண்டும்.
அதாவது உங்களது கவனம் வேறு எங்கும் சிதற கூடாது. உங்கள் கண்களின் மீது தான் இருக்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பின்பு கண்களை திறக்க வேண்டாம். உங்களது கண்களை மிகவும் மெதுவான முறையில் திறக்க வேண்டும். கண்களை திறந்ததும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சக்தி சக்ராவின் மையப் புள்ளியை உற்று நோக்குங்கள், மூன்று நிமிடம் வரை.
அதன்பின்பு திரும்பவும் உங்களது கண்களை 3 நிமிடம் மூடிக் கொள்ளுங்கள். மூன்று நிமிடம் கழித்து மீண்டும் சக்கரத்தை காண வேண்டும். இப்படியாக கண்களை மூடிக் கொள்ளும் அந்த சமயத்தில், உங்களது ஆசையை, கற்பனையான வாழ்க்கையை வாழ்வது போன்ற பாவனை செய்து கொள்ள வேண்டும். அதாவது உங்களுக்கு சொந்த வீடு கட்டி அதில் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அந்தக் காட்சியை உங்கள் கண்களுக்கு முன்பு கொண்டு வாருங்கள்.
ஒருவரிடம் இருந்து கடன்தொகை வசூலாக வேண்டும் என்றாலும் கூட, அவரிடமிருந்து அந்த கடன் தொகை உங்கள் கைகளுக்கு வருவது போன்ற பாவனையை செய்துகொள்ளுங்கள். தீராத நோய் தீர வேண்டும் என்றாலும் அந்த நோய் தீர்ந்துவிட்டது என்ற பாவனை செய்து கொள்ளலாம். இப்படியாக பல வகைப்பட்ட பிரச்சினைகளுக்கும் இந்த பயிற்சியின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
ஏதாவது ஒரு ஆசையை தான் நிறைவேற்றுவதற்காக பயிற்சி எடுக்க வேண்டுமே தவிர, பல பிரச்சனைகளை போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. ‘இப்படியாக தொடர்ந்து கண்களை மூடுவதும், அதன் பின்பு சக்கரத்தைப் பார்த்தும் என்ற சுழற்சியில், உங்களது பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். (கண்களை மூடும் போது உங்களது ஆசையை பாவனை செய்துகொள்ள வேண்டும். கண்களை திறக்கும் போது சக்தி சக்கரத்தை மையப்புள்ளியை உற்று நோக்க வேண்டும். அவ்வளவுதான் பயிற்சி.) தினம்தோறும் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கின்றதோ, அந்த நேரத்தில் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். தொடர்ந்து இதே போன்று 20 நிமிடம் பயிற்சியை தொடர வேண்டும்.
தினம்தோறும் இந்த பயிற்சியை செய்து வந்தால், நீங்கள் கற்பனை செய்து வரும் அந்தக் காட்சியானது விரைவில் வெற்றி அடைய கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படும். இந்த பயிற்சி அறிவியல்ரீதியான உண்மையும் கூட. ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் நடந்து முடிந்துவிட்டது போல் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். நடக்க வேண்டும் என்றவாறு கற்பனை செய்துகொள்ளுங்கள். நடந்து முடிந்த விஷயமாக கற்பனை செய்யும் பட்சத்தில், அது நம்முடைய மனதை விட்டும், மூளை விட்டும் விரைவாகவே நீங்கிவிடும்.
எடுத்துக்காட்டாக ஒரு பொருளை அடையும் வரையில் தான் அதன் மேல் நமக்கு அதிகமான ஈடுபாடு இருக்கும். அந்த பொருள் நமக்கு கையில் கிடைத்து விட்டது என்றால், அதன் மேல் உள்ள ஆசையானது குறைந்து கொண்டே போகும். இது இயற்கையான ஒன்று. முறைப்படி இந்த பயிற்சியை செய்து வருவதன் மூலம், சக்தி சக்கரத்திற்கு எத்தனை ஆற்றல் உள்ளது என்பதை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும்.
No comments:
Post a Comment